
Page 1 of 3
2. மனம் விரும்புதே உன்னை...

மூவரும் வீணாவின் வீட்டை அடைந்த போது, வீணாவின் குழந்தை ரோஷினி, அவள் பாட்டியுடன் விளையாடி கொண்டிருந்தாள். அன்னையை கண்ட உடன் பாட்டியை விட்டு விட்டு ஓடி வந்தாள்.
"பார்த்தியா வீணா இவளை.. இவ்வளவு நேரம் பாட்டி பாட்டின்னு செல்லம் கொஞ்சிட்டு உன்னை பார்த்த உடனேயே விட்டுட்டு ஓடி போறாள்?"
கீதா, வீணாவின் கையில் இருந்த ரோஷினியின் கன்னங்களை செல்லமாக கிள்ளி விட்டு,
"வேற என்ன ஆன்ட்டி? ஓடி வரலன்னா அம்மா கோவிச்சுப்பாங்களே... நல்லா அம்மாவை புரிஞ்சு வச்சிருக்கிறாள்."
வீணாவிற்கு பொதுவாக பொஸஸிவ்னஸ் (possessiveness) அதிகம். அதை தான் கீதா குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாக புன்னைகைத்த போதும், மருமகளை விட்டுக் கொடுக்காமல் தாங்கி பேசினார் வீணாவின் அத்தை,
"பின்னே அம்மாவை விட வேற யாரு முக்கியம்..?"
மூன்று பேரும் சிரித்து விட்டு, ரோஷினியிடம் சிறிது நேரம் செல்லம் கொஞ்சினார்கள். வீணாவிற்கு பிறந்த நாளிற்கு வாங்கி வந்திருந்த பரிசுகளை கொடுத்து விட்டு, மற்றவர்கள் அவளுக்கு வாங்கி தந்திருத்த பரிசுகளை பார்த்தார்கள். பின்னர் மதிய உணவை ஒரு வெட்டு வெட்டி விட்டு, தூங்கி போயிருந்த ரோஷினியை, அவள் பாட்டியிடம் விட்டு விட்டு, வீணாவின் அறைக்கு சென்று அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். மூன்று தோழிகளும், அந்த வீட்டில் அனைவருக்கும் பரிச்சயமானவர்கள் என்பதால், இது யாருக்கும் புதியதாக இருக்கவில்லை!
"வீணா உங்க வீட்டு குக் செம சூப்பர்.. எப்படி தான் இந்த சாப்பாட்டை டெய்லி சாப்பிட்டும் இப்படி உடம்பை மெயின்டெயின் பன்றியோ?" என்றாள் கீதா
"அதெல்லாம் ரகசியம் அக்கா... ஷேர் பண்ண கூடாது..."
"அன்னைக்கு அவினாஷ் ரொம்ப பீல் பண்ணாரு.. நீ ரொம்ப ஒல்லியாயிட்டேன்னு..."
"அதெல்லாம் சும்மா அக்கா... வைப் கொஞ்சம் குண்டானாலே என்ன இப்படி வெயிட் போட்டுட்டேன்னு கிண்டல் பண்ணுவாங்க..."
இருவரும் பேசுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தாள் இந்து.
"என்ன இந்து இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்க? என்ன விஷயம்?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா..."
"நீயும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை... நாங்க எவ்வளவு நாள் தான் வெறும் ராஜீவையும் அவினாஷையும் கிண்டல் பண்ணி டைம் பாஸ் பண்ணுறது?"
"ஆமாம் அது தான் இப்போ ரொம்ப முக்கியம்..."
"ஹே என்ன நீ ரொம்ப தான் அலுத்துக்கிற?"
இந்து பதில் சொல்லும் முன் இடையில் புகுந்த வீணா,
"எனக்கு தெரியும் அக்கா ஏன் இந்து இன்னைக்கு அமைதியா இருக்கான்னு.."
"ஆமாம்... இவங்களுக்கு தான் என் மைன்டை படிக்குற பவர் இருக்கு..."
"மத்தபடி எப்படியோ.. இன்னைக்கு எனக்கு தெரியும்... "
சுவாரசியத்துடன் கீதா,
"அது என்ன விஷயம் வீணா?" என்றாள்.
"இந்துக்கு இப்போ ஒருத்தரை பத்தி தெரிஞ்சுக்காட்டி தலையே வெடிச்சிடும் போல இருக்கு... ஆனால் உங்க கிட்ட எப்படி கேக்குறதுன்னு யோசிக்குறா.. பரவாயில்லை மேடம் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணறேன்."
"இது என்ன புது கதை??" என்றாள் இந்து.
"அது யாரு வீணா???" என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் கீதா.
"வேற யாரு அக்கா, இன்னைக்கு நாம இந்து ஆபீஸ்ல மீட் பண்ணினோமே உங்க பிரதர் இன் லா மிஸ்டர் சஞ்சீவ் தான்...."
இந்துவின் முகம் நிறம் மாறியது, அது கோபத்தினாலா அல்லது வெட்கத்தினாலா என்று நிர்ணயிக்கும் முன் கீதா,
"சஞ்சீவா?????" என்றாள் ஆச்சர்யத்துடன்.
"ஆமாம் அக்கா... நீங்க அந்த ரூம்ல பார்க்கலையா என்ன... அவன் இல்லை இல்லை அவர் இந்துவை என்ன ஒரு லுக் விட்டுட்டு இருந்தாரு... இந்து பேசின ஒரு வார்த்தையும் கட்டாயம் அவர் மண்டையில ஏறி இருக்காது... நல்ல வேளை... நாம போய் ..."
"போதும் வீணா ஸ்டாப் இட்..." என்றாள் இந்து கோபத்துடன்.
"சரி இப்போ என்ன உனக்கு சஞ்சீவை பத்தி தெரியனும்.."
கீதா முடிக்கும் முன்,
"எனக்கு எந்த சஞ்சீவை பத்தியும் தெரிய வேண்டாம் எந்த குரங்கை பத்தியும் தெரிய வேண்டாம்..."
"குரங்கா????"
மற்ற இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
"ஆனால் இந்து, சஞ்சீவ் பண்ற சேட்டைக்கு அவரை குரங்குன்னு சொன்னால் தப்பில்லை தான்." என்றாள் கீதா.
"சரி அக்கா... அவளுக்கு வேண்டாமென்றால் இருக்கட்டும். எனக்கு சொல்லுங்க இந்த சஞ்சீவ் பத்தி... அது என்ன அவர் எம்பிஏ படிச்சுட்டு, ஏதோ ஹாஸ்பிட்டல் நடத்துராருன்னு சொன்னீங்க?
"ஆமாம்... சஞ்சீவுக்கு எல்லா விஷயமும் விளையாட்டு தான்...சஞ்சீவுக்கு ராஜேஷ்ன்னு ஒரு பிரெண்ட் இருக்கார். அவர் டாக்டரா இருக்கார். அவர் ஏதோ ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் நடத்தினால் நல்ல பிசினஸ்-ன்னு சொன்னாராம் அதனாலே இவர் உடனே சுறு சுறுப்பா அண்ணன் சொன்ன பேச்சையும் கேக்காமல் ஹாஸ்பிட்டல் மேனஜ்மென்ட் எடுத்து படிச்சார். இவருக்குன்னு மாமாவும் அத்தையும் முன்னாடியே போட்டு வச்சிருந்த பிக்சட் டெப்பாசிட்டுல இருந்து எல்லா பணத்தையும் எடுத்து மயிலாப்பூர்-ல ஒரு ஹாஸ்பிட்டல்ல விலைக்கு வாங்கி இருக்கார். மருத்துவத்தை போய் ஒரு பிசினஸா பார்க்கிறாறேன்னு அத்தைக்கு வருத்தம். சரி அதாவது ஒழுங்கா நடத்தினால் பரவாயில்லையே.. ஆனால் இவர் வாங்கினதோட சரி. அந்த ஹாஸ்பிட்டல் பக்கமே போக மாட்டேங்குறார். கேட்டால் அங்க வேலை செய்ற மத்தவங்களே எல்லாம் பார்த்துப்பாங்கன்னு சொல்றார்.. இருபது வருஷம் முன்னாடியே யோசிச்சு மாமா பசங்களுக்காக போட்டு வச்ச பணம்.. அதோட அருமை தெரியாமல் இவர் இப்படி இருக்காரேன்னு அவங்களுக்கு கவலை....ஆனால் மத்தபடி ரொம்ப நல்லவர் தான்... என்ன கொஞ்சம் விளையாட்டுத்தனம் தான். இன்னைக்கு கூட காலையிலே வரும் போது அத்தை பாவம் தனியா உங்களை கஷ்டப் பட்டு வளர்த்திருக்காங்கன்னு சொன்னால் சொல்றாரு ஆமாம் அண்ணி பணம் இல்லைன்னால் கஷ்டம்ன்னு.. ஹ்ஹ்ஹுஊம்... சரி கல்யாணம் ஆனால் தானா பொறுப்பு வந்திரும்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.."
"அது என்ன அக்கா சிக்கல்?" என்றாள் வீணா
"மாமாக்கு அப்புறம் அத்தைக்கு துணையா நின்னு எல்லாம் செஞ்சது அவங்க தம்பி தான். அதனால் அத்தை, அவங்க தம்பி பொண்ணு கண்மணிய தான் சஞ்சீவ் கல்யாணம் பண்ணிக்கனும்னு அடம் பிடிக்குறாங்க. சஞ்சீவ் மாட்டேன்னு அடம் பிடிக்குறார்.."
"நல்ல வேலை... பரவாயில்லை.... இந்து பார் சஞ்சீவுக்கு கண்மணியை பிடிக்காதாம்..."
"பிடிக்காதுன்னு இல்லை.. சஞ்சீவை பொறுத்த வரை கண்மணியும் அவருக்கு ஒரு சிஸ்டர் மாதிரி..."
"கரெக்ட் தான் அக்கா இந்த மாதிரி அத்தை பையன் மாமா பொண்ணு எல்லாம் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தானே சொல்றாங்க.." என்ற வீணா, இந்துவை பார்த்து,
"என்ன இந்து இவ்வளவு டிடைல்ஸ் போதுமா இன்னும் ஏதாவது தெரியனுமா?"
"வீணா நீ என்கிட்டே இருந்து அடி வாங்க போற.. நான் யாரை பத்தியும் கேக்கலை..."
"ஓஹோ அப்போ ஏன் டல்லா இருந்தீங்க மேடம்? வேற எதை பத்தி யோசிச்சிட்டு இருந்தீங்க??"
என்ன சொல்லி சமாளிப்பது என்று சில வினாடிகள் யோசித்து விட்டு.. எப்போதும் கை கொடுக்கும் விஷயத்தையே சொன்னாள் இந்து.
"வேற என்ன எப்பவும் போல எங்க அத்தை வீட்டு விஷயம் தான்..."
"என்ன ஆச்சு இந்து? திரும்பவும் எதாவது பிரச்சனையா?" என்றாள் கீதா.
- Prev
- Next >>


